மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் சடலங்கள்…!(வீடியோ)
மெக்ஸிகோவில் இரண்டு அன்னிய சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
“மனிதர் அல்லாத” வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் என்று நம்பப்படும் இரண்டு சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை மெக்சிகன் பத்திரிகையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மௌசன் வழிநடத்தி வந்துள்ளார். பல தசாப்தங்களாக வேற்று கிரக நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் அவர், மெக்சிகன் விஞ்ஞானிகளுடன் இணைந்து இதை கண்டுப்படித்துள்ளார்.
https://twitter.com/i/status/1701783291659968887
அந்த எச்சங்கள் அனைவரும் பார்க்கும் வகையில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஏலியன் மம்மி பெருவின் குஸ்கோவில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விஞ்ஞானிகள் ரேடியோகார்பன் டேட்டிங் பயன்படுத்தி DNA ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.