இஸ்ரேலில் மூடப்படும் அல் ஜசீரா அலுவலகங்கள் – ஒருமனதாக வாக்களிப்பு
இஸ்ரேலில் உள்ள அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களை மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் அமைச்சரவை ஒருமனதாக அதற்கு வாக்களித்ததாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடா்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில்,
“இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் அல் ஜசீரா சேனலை இஸ்ரேலில் மூடுவதற்கு எனது தலைமையிலான அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது” என குறிப்பிட்டர்.
இது நிரந்தர முடிவா அல்லது இடைக்கால முடிவா என்பது குறித்தும் அரசின் இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் அவா் குறிப்பிடவில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அல் ஜசீரா மறுத்துள்ளது.
காஸா போரை நிறுத்த கத்தாா் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் நெதன்யாகு ஹமாஸ் தலைவா்களுக்கு கத்தார் அடைக்கலம் தருவதாக தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறாரை்.
இந்நிலையில் கட்டாரை தலைமையிடமாகக் கொண்ட அல் ஜசீரா நிறுவனத்தின் மீதான இஸ்ரேலின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.