செய்தி

சீனாவில் திருமணமான பெண்களை இலக்கு வைக்கும் விமான சேவை நிறுவனம்

சீனாவில் திருமணமான பெண்களையும், அவர்களின் தாய்மாரையும் விமானப் பணிப்பெண்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் (Spring Airlines) அறிவித்துள்ளது.

“Air Aunties” என இந்த விமான சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பெண்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதனை மறுத்துள்ளது.

“Air Aunties” என்ற பெயர் அவமரியாதையானது என்றும், குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வது பெண்களின் பாரம்பரிய கடமை என்ற சிந்தனையை ஏற்படுத்துவதாக விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் விமானப் பணிப்பெண்களாக 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் 25 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களை ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

தாம் எதிர்பார்க்கும் பெண்கள் அனுபவம் பெற்றவர்கள் என்றும், பயணிகளை நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விமான நிறுவனத்தின் புதிய முயற்சிக்கு சில தரப்பினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!