டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு!
டெல்லியின் காற்றின் தரக்குறியீடு இன்று மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
காற்றின் குறயீடானது 391 என்ற நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகர் முழுவதும் புகைமூட்டம் பரவி காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டெல்லியில் உள்ள 40 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 20 நிலையங்கள் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) டெல்லியில் காலையில் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்நிலையில் விமான சேவைகளில் இடையூறு ஏற்படலாம் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும், தாமதங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன. மேலும் ரயில் செவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இருவரும் பயணிகள் நிலையங்கள் அல்லது விமான நிலையங்களுக்குச் செல்வதற்கு முன் தங்கள் விமானங்கள் மற்றும் ரயில்களின் நிலையைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.





