லண்டன் வாழ் மக்களுக்கு காற்று மாசு குறித்து கடுமையான எச்சரிக்கை
லண்டன் மேயர் சாதிக் கான், தலைநகரில் அதிக மாசு எச்சரிக்கையை நீட்டித்துள்ளார். இதன்படி, “தேவையற்ற கார் பயணங்களை” தவிர்க்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளார்.
சிட்டி ஹால், லண்டன் இம்பீரியல் கல்லூரியின் முன்னறிவிப்பாளர்களுடன் சேர்ந்து, நேற்று நகரத்தில் காற்றை சுவாசிப்பது ஆபத்தானதாகிவிட்டது என்று கூறியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“அதிக மாசுபாடு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நச்சுக் காற்று ஆபத்தானது, குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் நிலைமைகள் உள்ளவர்களுக்கு” என்று சாதிக் கான் டுவிட் செய்துள்ளார்.
“தயவுசெய்து தேவையற்ற கார் பயணங்களைத் தவிர்க்கவும், இயந்திர செயலிழப்பதைத் தவிர்க்கவும் மற்றும் மரம் அல்லது தோட்டக் கழிவுகளை எரிக்க வேண்டாம்.” எனவும் மேயர் அலுவலகம் மேலும் கூறியதாவது:
“இம்பீரியல் கல்லூரியின் முன்னறிவிப்பாளர்களின் ஆலோசனையின் பேரில், மேயர் அதிக மாசு எச்சரிக்கையை நாளை (ஜூன் 14) வரை நீட்டித்துள்ளார்.”
லண்டனின் காற்றின் தரம் சுமார் 100 வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.