35,000 அடி உயரத்தில் எயார் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – நோய்வாய்ப்பட்ட பயணிகள்

லண்டனிலிருந்து மும்பை நகருக்குச் சென்றுகொண்டிருந்த எயார் இந்தியா விமானத்தில் 2 விமான ஊழியர்களும் 5 பயணிகளும் நோய்வாய்ப்பட்டதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் 35,000 அடி உயரத்தில் இருந்தபோது அவர்களுக்கு மயக்கம் வந்ததாகவும் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விமானம் மும்பை நகரில் பத்திரமாகத் தரையிறங்கியதும் மருத்துவக் குழுக்கள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கத் தயாராக இருந்தன.
பயணிகளும் ஊழியர்களும் நோய்வாய்ப்பட்டதற்கான காரணத்தை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், விமானிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.
(Visited 22 times, 1 visits today)