ஏர் இந்தியா விமான விபத்து – விமானிதான் காரணமா?
ஏர் இந்தியா விமான விபத்திற்கு அவ்விமானத்தை இயக்கிய விமானி காரணமல்ல என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவ மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவரை தவிற விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமான விபத்திற்கு விமானி காரணமாக இருக்கலாம் என்ற வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையொன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விமானியின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி, இந்த விபத்திற்கு விமானி காரணமல்ல என உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் விமானியின் தந்தையிடம் நீங்கள் சுமையை சுமக்காதீர்கள். விமானியைக் குறை சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையில் அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.




