இலங்கை செய்தி

வவுனியாவில் திருடப்பட்டு 30 லட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சிலையை கடத்தி வந்தவர் தப்பி தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினார்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்தார்.

சிலை கைப்பற்றப்பட்டு யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை