ஜெர்மனியில் அதிகரிக்கும் உதவி பணம் – மக்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் எதிர் வருடம் தொடக்கம் சமூக உதவிகளில் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வருடம் தனி நபர் ஒருவருக்கு 61 யூரோ அதிகரிக்கபடும். இந்நிலையில் தற்பொழுது பலர் சமூக உதவி திணைக்களத்தில் இருந்து பெறுகின்ற பணத்தை வேலை செய்கின்றவர்களும் பெற்றுக்கொள் யோசிப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணத்தினால் பலர் தமது வேலையை கைவிடக்கூடிய நிலை உள்ளதாகவும், மேலும் பலர் தமது வேலையை கைவிட்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தொழிற்சங்கங்கள் இவ்வாறு சமூக உதவி பணத்தை உயர்த்துவதற்கு தமது பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதனால் பலஅரசியல் பிரமுகர் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதாவது தற்பொழுது ஜெர்மனியின் அடிப்படை சம்பளமானது மணித்தியாலத்துக்கு 12 யூரோவாக காணப்படுகின்றது. எதிர்வரும் வருடம் இந்த அடிப்படை சம்பளத்தில் சிறிதளவு உயர்ச்சி ஏற்படவுள்ளது.