இலங்கை கல்வி முறையில் AI தொழில்நுட்பம்! வெளியான அறிவிப்பு!
பள்ளிகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள IT பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கல்கிசையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இத்திட்டத்தின் முன்னோடித் திட்டம் 17 பள்ளிகளை உள்ளடக்கிய வகையில் மார்ச் 19 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதற்காக கல்வி அமைச்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து செயற்படுவதாகவும் இதன் மூலம் சர்வதேச தரத்திற்கமைவாக இந்நாட்டு பிள்ளைகளுக்கு பாட அறிவை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.