மனிதனுக்குத் துணையாக மாறும் AI செல்லப்பிராணிகள்
சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் கூடுதலான இளையர்கள் இயந்திரச் செல்லப்பிராணிகளைத் துணையாகக் கருதுகின்றனர்.
‘BooBoo’ எனும் அது செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குகிறது.
அதன் விலை 1,400 யுவான் வரை போகலாம். சீனாவில் தனிமையைப் போக்கத் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மனித நண்பர்கள் வாழ்க்கையில் ஆற்றும் பங்கை இயந்திரச் செல்லப்பிராணிகளாலும் ஆற்ற முடியும் என்று சிலர் கூறுகின்றனர்.
வேறு சிலர், அவற்றைத் தமது பிள்ளைகளுடன் விளையாடுவதற்காகவும் பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்காகவும் வாங்குகின்றனர்.
ஆயினும் நிஜமான செல்லப்பிராணிகளுக்கு அவை ஈடாகாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)





