Youtube பயனீட்டாளர்களின் வயதை கண்டறியும் AI
Youtube தளத்தில் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிறுவர்களைக் கண்டறிய அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
அந்தப் புதிய பாதுகாப்பு அம்சம் அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது.
சமூக ஊடகங்களில் பெரியவர்களுக்காக வெளிவரும் உள்ளடக்கங்களைப் பிள்ளைகள் பார்க்கக்கூடாது என்று அக்கறை எழுந்தது.
இனி பயனீட்டாளர் எவ்வித காணொளிகளைக் காண்கிறார், அவரது Youtube கணக்கு எவ்வளவு நாள்களாகச் செயல்படுகிறது போன்ற தகவல்களைக்கொண்டு அவரது உண்மையான வயதைக் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பயனீட்டு அனுபவமும் பாதுகாப்பும் வயதிற்கு ஏற்ப மாறும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒருவர் இளம் பிள்ளை என்று நம்பப்பட்டால் அவருக்கு அறிவிப்பு அனுப்பப்படும். அவர் உரிய ஆவணங்களுடன் தம் வயதை உறுதிசெய்யலாம்.
(Visited 7 times, 1 visits today)





