மனிதர்கள் உதவியின்றி AIயால் மட்டுமே சாதிக்க முடியாது – பில்கேட்ஸ் விளக்கம்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு துறைகளில் வேலை இழப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்படும் நிலையில், 3 துறைகளில் மனிதர்கள் உதவியின்றி ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் சாதிக்க முடியாது என்று முன்னணி பணக்காரரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது. நாம் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். இருப்பினும் மனிதர்களுடைய தேவை பல துறைகளில் இன்றியமையாததாக உள்ளது.
விளையாட்டு துறையை எடுத்துக் கொண்டால் அங்கு மனிதர்கள் விளையாடினால்தான் ரசிப்போம். கம்ப்யூட்டர்கள் விளையாடுவதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதுபோன்று பல துறைகள் உள்ளன.
கோடிங் எழுதுபவர்கள் – கோடிங் எனப்படும் மென்பொருள் மற்றும் கணினி பயன்பாட்டிற்கான கோடிங்கை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி எழுதினாலும் அதில் தவறுகள் ஏற்படும். இதனை மனித செயல்பாடுகள் மூலம் தான் தவிர்க்க முடியும். இந்த துறையில் எப்போதுமே மனிதர்களின் தேவை இருக்கும்.
எரிசக்தி துறை வல்லுனர்கள்- இந்தத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்பார்வை செய்ய முடியாது. முக்கிய முடிவுகள் அனைத்தும் மனிதர்களால் மட்டுமே எடுக்க முடியும்.
மூன்றாவதாக உயிரியல் தொழில்நுட்பம் – இந்த துறையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் இல்லாமல் இதில் எந்த செயல்பாடும் இருக்க முடியாது. இந்த துறையில் மனிதர்களுக்கு ஏ ஐ தொழில்நுட்பம் உதவி செய்யலாம் ஆனால் அவர்களுக்கு மாற்றாக அமையாது.
இப்படி பல துறைகளில் மனிதர்களுக்கு ஏ.ஐ தொழில்நுட்பம் உதவி செய்யும். ஆனால் மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக ஏஐ அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்துள்ளார்.