விவசாயிகளின் கையில் இனி துப்பாக்கி ? விவசாய அமைச்சர் பணிப்புரை

பயிர்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுக்குமாறு, விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வன விலங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது,
(Visited 16 times, 1 visits today)