வட அமெரிக்கா

உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டுக்கு ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ஆயுத உதவிகளை தொடர்ந்து அளித்துவரும் அமெரிக்கா தற்போது அதே அவசர கால உதவியாக தைவானுக்கும் ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 35 முறை அமெரிக்கா ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது இந்த நிலையில், 2023 நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக, தைவானுக்கு 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளிக்க காங்கிரஸ் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது போன்ற அவசர உதவிகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்பதுடன், ஜனாதிபதியே அவசர நிலை கருதி முடிவெடுக்கலாம். அந்த வகையில் தற்போது முதற்கட்டமாக 1 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுத உதவியை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஜனநாயக ரீதியில் ஆட்சியில் இருக்கும் தைவானை சீனா தனது சொந்தப் பிரதேசமாக பார்க்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சீனா ராணுவ அழுத்தத்தை அப்பகுதியில் அதிகரிக்க செய்துள்ளதுடன், தைவானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குப் படைப் பிரயோகத்தை பயன்படுத்தும் திட்டத்தையும் அந்த நாடு ஒருபோதும் கைவிடவில்லை.

கடந்த மாதமும் தைவானை சுற்று சீனா போர் பயிற்சிகளை முன்னெடுத்திருந்தது. இந்த நிலையிலேயே, அமெரிக்கா முதற்கட்டமாக 500 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்