இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் – 67,000 பன்றிகள் பாதிப்பு

இலங்கையில் அச்சுறுத்தும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக சுமார் 67,000 பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை, வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில கட்டுப்பாடு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் கடந்த ஆண்டு இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க, பண்ணையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கோரிக்கை விடுத்துள்ளார்.

 

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்