கோலாகலமாக நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் திருமணம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஷித் கான் திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது நபி ஒரேயொரு கிங் கான் ஆன ரஷித் கானுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள் என சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 வயதாகும் ரஷித் கான் ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
(Visited 49 times, 1 visits today)