ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 2,200ஐ தாண்டிய இறப்புகள் எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,394 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 2 times, 2 visits today)