ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலியானவர்களின் எண்ணிக்கை 800ஐக் கடந்தது!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது, 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) கூறுகையில், அதிகாலை 12:47 மணிக்கு (IST) பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 160 கி.மீ ஆழத்தில் மையமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் அபோட்டாபாத் வரை பலத்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)