விதி மீறல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 18ம் திகதி நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது, இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
இந்நிலையில் இப்போட்டியின் போது ICC நடத்தை விதிகளை மீறியதாக ஆப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
நூர் அஹ்மத், இன்னிங்ஸின் 16ஆவது ஓவரின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், அதேபோல் கிரிக்கெட் உபகரணங்களுக்கு சேதம் விளைவித்ததற்காக முஜீப் உர் ரஹ்மான் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து இரு வீரர்களுக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.





