UKவில் வைத்தியரை சந்திக்க அனுமதி மறுப்பு : பலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆப்கான் பிரஜை!
பிரித்தானியாவில் மருத்துவமனையொன்றில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூட்டன்-லெ-வில்லோஸில் (Newton-Le-Willows) உள்ள நியூட்டன் சமூக மருத்துவமனைக்கு சென்ற நபர் ஒருவர் சந்திப்புக்காக அனுமதி கோரியுள்ளார். இருப்பினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கோபமடைந்த அவர், கவுண்டர் ஒன்றை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த 05 பேரை ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் துணை மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என துணை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதுடையவர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது வேண்டுமென்றே காயப்படுத்துதல், சதி செய்தல் மற்றும் குற்றவியல் சேதம் உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மெர்சிசைடில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





