சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்த பொருட்களை ஏலத்தில் விற்க நடவடிக்கை!
சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏலம் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒருகொடவத்த பகுதியில் உள்ள சுங்க முனையத்திற்கு களவிஜயம் செய்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி இதுவரை 15 ஆயிரத்து 765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்இ இதனால் அரசுக்கு 14 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





