கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை : உள்ளிருப்பு போராட்டத்தால் 20 பேருக்கு நேர்ந்தக் கதி!
நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டங்கள் காரணமாக கடந்த வாரம் 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்னர், மேலும் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் $1.2 பில்லியன் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் திட்டத்தை ஊழியர்கள் எதிர்த்ததன் வெளிப்பாடாக குறித்த பணிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், போராட்டங்கள் நடத்தியதற்காக நீக்கப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 50 ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
(Visited 35 times, 1 visits today)





