பிரான்ஸில் ஆபத்தானவர்களாக கருதப்பட்ட 84 பேர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
பிரான்ஸில் சிறைவைக்கப்பட்டிருந்த 84 பேர் இவ்வருடத்தில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின் படி, பயங்கரவாத செயற்பாடுகளுக்காக இவர்க்ள சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருட தொடக்கத்தில் இருந்து அவர்கள் விடுதலையாகி வருகின்றனர். இதுவரை 84 பேர் விடுதலையாகியிருந்தனர்.
இந்த நிலையில், இவ்வருட இறுதிக்கும் மேலும் இருவரும் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டில் 36 பேரும், 2025 ஆம் ஆண்டில் 34 பேரும் விடுதலைக்கு தயாராக காத்திருக்கின்றனர்.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு, தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் அல்லது, பயங்கரவாதிகளுடன் உடன் இருந்தவர்கள் என பலர் இவர்களில் உள்ளடங்குவதாகவும் அறிய முடிகிறது.
பரிசில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்திய Armand R எனும் 26 வயதுடைய பயங்கரவாதியும் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.