சிங்கப்பூர் முழுவதும் அதிரடி சோதனை – நூற்றுக் கணக்கானோர் கைது
சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு பொலிஸ் தரை பிரிவுகள் மேற்கொண்ட 2 வார அதிரடி சோதனையில் அவர்கள் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதில் 236 ஆண்களும் 137 பெண்களும் அடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 1,200 க்கும் அதிகமான மோசடி சம்பவங்களில் தொடர்புடைய அவர்களின் வயது 14 முதல் 80 வரை இருக்கும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடன், வேலைவாய்ப்பு, மின்னணு வணிகம் உள்ளிட்ட மோசடிகளும் அதில் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் சுமார் S$10 மில்லியன் தொகையை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





