சிங்கப்பூரில் அதிரடி சோதனை – சுற்றிவளைக்கப்பட்ட 329 பேர்
சிங்கப்பூரில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தில் 329 பேர் பொலிஸார் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சுமார் 1,300 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 9.4 மில்லியன் டொலருக்கும் அதிகமாக தொகையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
தீவு முழுவதும் இந்த அதிரடி சோதனை கடந்த ஆகஸ்ட் 18 முதல் 31 வரை நடந்துள்ளது.
இதில் 15 முதல் 70 வயதுக்குட்பட்ட 236 ஆண்களும் 93 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின் வர்த்தகம், இணைய காதல், வாடகை மோசடி, முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தது போன்ற மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் விசாரணையில் உள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)