மைத்திரி உள்ளிட்ட நால்வருக்கு உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகிய நால்வரும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் உத்தரவிடப்பட்ட நஷ்ட ஈட்டை முழுமையாக வழங்க இவர்கள் மூவரும் தவறியுள்ளனர்.
இந்நிலையிலேயே சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக் கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)