இலங்கை

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து – பெண் ஒருவர் பலி!

வவுனியா – மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது வவுனியா – மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (10.10) இடம்பெற்றுள்ளது.

வவுனியா குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் 45 வயதுடைய வி.ஜெயந்தினி என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்