இலங்கையில் பயண அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு அனுமதி

தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டைகள் மூலம் பணமாக செலுத்தும் முறைக்கு பேருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனங்களும் வருமானத்தைப் பாதுகாக்க பயண அட்டைகளை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளிடம் இருந்து சட்டவிரோத கட்டணங்கள் குறித்து பல முறைப்பாடுகள் வந்துள்ளது.
அதை தவிர்க்க பயண அட்டை மூலம் பணம் செலுத்துவதே ஒரே தீர்வு என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
போக்குவரத்து அமைச்சும் இது தொடர்பான விலை மனுக்கோரல் அழைப்பு விடுத்துள்ளதாக வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)