விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

ஹைலெவல் வீதியில் உள்ள அவிசாவளை உக்வத்தை மயானத்திற்கு முன்பாக, 23 வயதுடைய யுவதியொருவர் இன்று (25) மாலை தான் பயணித்த அதே பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த யுவதி அவிசாவளையில் இருந்து குறித்த பேருந்தில் வந்து உக்வத்தை மயானத்திற்கு அருகில் இறங்கிய போது பின்னால் வந்த அதே பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரகதிபுர, அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய திலக்ஷி டில்ஷிகா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை (26) நடைபெறவுள்ளது.
அவிசாவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 23 times, 1 visits today)