பொரளை- 14 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலி!
பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத் பிரேமரத்ன, ஹேரத் முதியன்சேலா என்ற 24 வயதுடைய நபராவார்.
18 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 14வது மாடியில் கொத்தனார் ஒருவருக்கு உதவிய போது உயிரிழந்த நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





