அமெரிக்காவில் சுழற்றும் சூறாவளிக்கு மத்தியில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த இளம் ஜோடி

தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சூறாவளிக்கு முன்பு ஒரு இளம்ஜோடி மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்த காட்சிகள் உள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அங்கு கடந்த வாரம் சக்தி வாய்ந்த சூறாவளி காற்றுடன் புயல் வீசியது.
அப்போது அங்கு உள்ள ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற ஒரு இளம்ஜோடி சூறாவளிக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 2 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
(Visited 17 times, 1 visits today)