ஐரோப்பா

ஜெர்மனியில் இருந்து இந்தியா சென்ற பெண்ணுக்கு பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் இருந்து இந்தியா சென்ற பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளத.

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் ஜெர்மனி பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞனை தேடி புதுச்சேரி பொலிஸார் பெங்களூரு சென்றுள்ளனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தங்கி, சமூக சேவை செய்து வருகிறார்.

இவர், பெங்களூருவில் உள்ள தோழியை பார்க்க, கடந்த மாதம் 7ம் திகதி இரவு புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

பேருந்து புறப்பட்ட சற்று நேரத்தில், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த 22 வயது இளைஞன் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்..

ஆத்திரமடைந்த ஜெர்மன் பெண், அந்த இளைஞனை தாக்கி திட்டினார். அதனையொட்டி, பேருந்து நடத்துனர் அந்த இளைஞனை நடுவழியில் இறக்கிவிட்டார்.

இச்சம்பவம் குறித்து ஜெர்மன் பெண் ஒன்லைனில் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தில் முன் பதிவை ஆய்வு செய்தார்.

அதில், ஜெர்மன் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதும், அவரது முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அந்த இளைஞன் கைது செய்ய உருளையன்பேட்டை பொலிஸார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!