இலங்கை செய்தி

யாழில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட பெண் – பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

“தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்” என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை, 40 வயதான நபர் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக குறித்த நபருடன் இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார்.

அதனை அறிந்து,  குறித்த நபர் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என உயிரிழந்த பெண் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து,

சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது “உன்னையே திருமணம் செய்வேன்” என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்று,  தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோலை எடுத்து பெண் மீது ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார்.

பெண்ணை படுகொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை