இலங்கை

திருமணமாகி சில மாதங்களிலேயே உயிரிழந்த பெண்!

திருமணமாகி 4 மாதங்களில்  காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) என்ற  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்,  நேற்று திங்கட்கிழமை (17)தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்