இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் மோசமான பொருட்களுடன் பெண்ணொருவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (28-12-2024) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது, பெண்ணிடமிருந்து 5,830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,070 மில்லிக்கிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்ணை சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை