கொழும்பில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பெண்

நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் களனி, பெத்தியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெத்தியகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் 820 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், டிஜிட்டல் தராசு மற்றும் 02 இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 18 times, 1 visits today)