கற்பூரம் ஏற்றிய போது சேலையில் தீப்பற்றி பெண் பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் வரலட்சுமி (58).
இவர் கடந்த 26ஆம் தேதி தமது வீட்டின் அருகே இருந்த பவானி அம்மன் ஆலயத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கற்பூரத்தில் இருந்து சேலையில் தீப்பற்றி உடலில் தீப்பரவியது.
இதில் பலத்த தீக்காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற வரலட்சுமி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வரலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்ற பெண் பக்தர் சேலையில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 12 times, 1 visits today)