அரசாங்கம் வழங்கிய அரிசியை தர மறுத்த கிராம அலுவலர் மீது பெண் தாக்குதல்
அரசாங்கம் வழங்கிய அரிசியை வழங்க மறுத்த பெண் ஒருவரால் தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணப்பிட்டி தெற்கு கிராம சேவையாளர் களப் பொறுப்பதிகாரியே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை சந்தேகநபர் இந்த நாட்களில் பெற்றுக் கொள்ளவில்லை எனவும், இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வஸ்கடுவ பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.