திருகோணமலையில் வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் கைது
கடற்படையினரும் பொலிஸாரும் திருகோணமலை குச்சவெளி காசிம்நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 54 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 50 மின்சாரமற்ற டெட்டனேட்டர்களுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடொன்றில் சோதனையிட்டதன் பின்னர் இந்த கைது ஏற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இம்முயற்சிகளின் நீட்சியாக, கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS வலகம்பாவினால் இன்று காசிம்நகர் பகுதியில் குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த பிறகு, அந்த வீட்டில் இருந்து இந்த 54 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 50 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களை சோதனைக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்க பயன்படுத்துவதற்காக இந்த வர்த்தக வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காசிம்நகரில் வசிக்கும் 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், வெடிபொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.