கையடக்க தொலைபேசிகளை பாதிக்கும் வைரஸ்… எச்சரிக்கைக்குரிய செயலிகள்
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தனிப்பட்ட போனில் இருந்து தரவுகள் திருடப்படும் சப்பவங்களும், பாடுபட்டு சேர்த்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களை காத்துக் கொள்வது மிக அவசியம். முன் பின் தெரியாத கணக்குகளில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருப்பதோடு, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதிலும் கவனம் தேவை.
சைபர் மோசடி நபர்களின் வலையில் விழாமல் இருக்க, ஆண்ட்ராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது, 11 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகள் நெக்ரோ ட்ரோஜான் (Necro Trojan) எனப்படும் ஆபத்தான வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வைரஸ் அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மற்றும் கேம் மோட்கள் மூலம் தொலைபேசியில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆபத்தான நெக்ரோ ட்ரோஜான் வைரஸ் 2019 இல் முதன்முறையாகக் காணப்பட்ட நிலையில், இப்போது அது மீண்டும் வந்துவிட்டது. இப்போது இந்த வைரஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் பரவுகிறது என்பதால் ஆண்ட்ராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக (Cyber Attack) இருக்க வேண்டும்.
நெக்ரோ ட்ரோஜான் என்னும் ஆபத்தான வைரஸ் தொலைபேசியில் நுழைந்தால், அது பல ஆபத்தான கோப்புகளை பதிவிறக்கி, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பின்னர் அது உங்களுக்குச் சொல்லாமலேயே விளம்பரங்களைக் காட்டும் கருவியாக மட்டுமல்லாம, போனை சேதப்படுத்தும் அல்லது ஹேக் செய்ய உதவும் பிற ஆபத்தான வைரஸ்களைப் பரப்ப உதவும் கருவியாக மாற்றுகிறது.
2 பாம்புகளை வாயில் கவ்விய ராஜ நாகம்… பார்த்தாலே பதறவைக்கும் வைரல் வீடியோ
ஒரு நொடி தாமதத்தால் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! நிலச்சரிவில் இருந்து தப்பித்த வீடியோ வைரல்…
தொலைபேசிக்கு சேதம் விளைவிக்கும் வகையில், ஆபத்தான வைரஸை பரப்புவதில் குறிப்பாக இரண்டு செயலிகள் அதிகம் உதவியதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. அவை Wuta Camera மற்றும் Max Browser ஆகிய செயலிகளாகும்.
Wuta Camera என்பது மிகவும் பிரபலமான கேமரா செயலி. இது சுமார் 10 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் பழைய பதிப்பு அகற்றப்பட்ட நிலையில், பயனர்கள் தங்கள் தொலைபேசியில் உள்ள செயலியை புதுப்பிக்க வேண்டும் அல்லது புதிய செயலியை பதிவிறக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட மேக்ஸ் உலாவியும் (Max Browser ) அகற்றப்பட்டது. இவை தவிர, Spotify Plus, WhatsApp, Minecraft மற்றும் பிற செயலிகளின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் இந்த மாற்றியமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்தி வைரஸைப் பரப்புகிறார்கள்.
ஆண்ட்ராய்டு வைரஸ்களைத் தவிர்க்க, கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்வதோடு, உங்கள் மொபைலில் கூகுள் பிளே ப்ரோடெக் அம்சத்தை ஆன் செய்து வைத்திருக்கவும். எந்தவொரு செயலியையும் பதிவிறக்கும் முன், அதன் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யவும். உங்கள் போனில் வைரஸ் தடுப்பு மென்பொருளையும் ஆக்டிவேட் செய்யலாம்.