பங்கிங்ஹாம் அரண்மனை வாயிற்கதவில் மோதிய வாகனம்!
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற் கதவு மீது வாகனம் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பெருநகர காவல்துறை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், குற்றச் சேதம் குறித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது அரண்மனைக்குள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஏபிசி செய்திக்கு உறுதிப்படுத்தினார்.
வாயில்கள் பழுதுபார்க்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





