Site icon Tamil News

துனிசிய ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது

துனிசியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் துனிசிய ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ வீரர்கள் பயணித்த உலங்குவானூர்தி நாட்டின் வடமேற்கு பகுதியில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், உயிரிழந்த இரு இராணுவ வீரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை இரவு Bizerte அருகே இரவு ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்ததாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு துனிசிய அதிபர் கைஸ் சைட் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version