காங்கோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ட்ரக் : 18 பேர் பலி!
தென்மேற்கு காங்கோவில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
காங்கோ மத்திய மாவட்டத்தில் உள்ள கசங்குலு பிரதேசத்தில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் சரக்குகள் நிரப்பப்பட்டு பல பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் பள்ளத்தாக்கில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் கசங்குலு பொது மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய வேகம் விபத்திற்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





