பிரான்ஸில் பொலிஸ் அதிகாரிகளின் விபரீத முடிவு – 3 பிள்ளைகளின் தந்தையின் செயல்
பிரான்ஸில் தேசிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள Hérault எனும் மாவட்டத்தில் உள்ள நகரம் ஒன்று உள்ளது.
அங்குள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த 40 வயதுடைய வீரர் ஒருவரே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், சனிக்கிழமை காலை தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தலையில் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
இவ்வருடத்தில் தேசிய பொலிஸ் ஐந்தாவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.
தற்கொலை சிந்தனைகளுக்கு எதிராக அரசு ஒரு உதவி மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
உதவிகள் தேவைப்பட்டால் 3114 எனும் இலக்கத்துக்கு அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





