இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை வைரம்!
இந்தியாவில் இயற்கையான வைரக்கற்களை ஒத்த செயற்கை வைரக்கற்களை உற்பத்தி செய்வது சமீபகாலமாக வளர்ச்சியடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறை முந்தைய ஆண்டுகளை விட 15 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் வைர உற்பத்தியை பொருத்தவரை இந்தியா 90 விழுக்காடு பங்கு வகிக்கின்றது. இருப்பினும் இதற்கான செலவு அதிகம். ஆகவே தற்போது வியாபாரிகள் செயற்கை வைரத்தை கொண்டு இலாபம் ஈட்டும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் இவ்வாறான செயற்கை வைரங்கள் குறைந்த விலையில் பெறக்கூடியதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





