இலங்கை

இலங்கையில் 650 அலைபேசிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் ரக வண்டியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்றையதினம்(27) இரவு கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து இடைமறித்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோது சுமார் 650 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கையடக்க தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் கெக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் அவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் ரக வண்டியையும் கடற்படையினர் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!