எல் சால்வடார் அரசாங்கம் எடுத்துள்ள ஆச்சரியமான முடிவு
வெளிநாட்டில் இருந்து அதிக திறமை வாய்ந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகளுக்கு குடியுரிமை வழங்க எல் சால்வடார் முடிவு செய்துள்ளது.
அதற்காக 5,000 இலவச விசாகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட முழுமையான குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல் சால்வடார் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு, அங்கு சுமார் 6.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இதன் தலைவர் நயிப் புகேலே, இடதுசாரி அரசியல் வரலாற்றில் இருந்து வந்தவர் ஆவார். ஆண்டு தனிநபர் வருமானம் 5,000 டொலர்கள் ஆகும்.
(Visited 4 times, 1 visits today)