இலங்கையில் கைக்குண்டுடன் தனியார் வகுப்புகளுக்குச் சென்ற மாணவன்
ஹசலக்க பிரேதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் கைக்குண்டுடன் தனியார் வகுப்புகளுக்கு சென்றதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், தனியார் வகுப்பு ஆசிரியர் அதனை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹசலக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதேச பாடசாலை ஒன்றில் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஹசலக பஹே எல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் தனது வீட்டிற்கு அருகாமையில் ஓடும் ஓடையில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டாாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறாத மாணவன் மறுநாள் வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் வகுப்புக்கு கொண்டுவந்து ஆசிரியரிடம் காண்பித்துள்ளார்.
அது வெடிக்கக் வைக்க கூடிய கைக்குண்டு என்பதை உறுதி செய்த ஆசிரியர்,பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹசலக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.