இலங்கை செய்தி

காத்தாடிக்காக கையை இழந்த மாணவன்

மாத்தறை, வேரகம்பிட்ட பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவரின் கை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று (25) பிற்பகல் காத்தாடி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையாக சென்றதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, வேரகம்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் மாணவனை வாளால் தாக்கியதாகவும், மாணவனின் வலது கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பாடசாலை மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை